இங்கிலாந்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு.. ஆஷஸ் 2வது டெஸ்டில் முக்கிய வீரர் திடீர் விலகல்!

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்டில் இருந்து, இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகியுள்ளார்.

இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 4 ஓவர்கள் மட்டுமே வீசிய இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். அதன் பின்னர் அவர் பந்துவீச வரவில்லை.

இந்நிலையில் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி, லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 14ஆம் திகதி நடக்கிறது.

ஆனால், இந்த போட்டியில் இருந்து ஆண்டர்சன் விலகியுள்ளார். அவரது கால் பகுதியில் காயம் இன்னும் சரியாகாததால், லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து அவர் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பதிலாக ஜாப்ரா ஆர்ச்சர் ஆடும் லெவன் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்த நிலையில், மூத்த வீரரான ஆண்டர்சன் விலகியுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

Reuters Photo

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்