விளையாடி கொண்டிருக்கும் போது திடீரென காணாமல் போன யுவராஜ் சிங்.. அதிர்ந்து போன ரசிகர்கள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

கனடா டி 20 லீக் தொடரில் பேட்டிங் போது திடீரென மைதானத்தை விட்டு யுவராஜ் சிங் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அண்மையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் இருந்து ஓய்வை அறிவித்தார் யுவராஜ் சிங்.

பின்னர் பிசிசிஐயிடம் அனுமதி பெற்று குளோபல் கனடா டி20 லீக் தொடரில் ஆடிவருகிறார்.

கனடா டி20 லீக் தொடரில் ஆடும் டொரண்டோ நேஷனல்ஸ் கேப்டனாக யுவராஜ் சிங் உள்ளார். ஐபிஎல்லில், சில ஆண்டுகளாக பார்மின்றி சொதப்பிய யுவராஜ் சிங், கனடா டி20 லீக்கில் அபாரமாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், மாண்ட்ரீயல் டைகர்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 137 ரன்கள் என்ற இலக்கை டொரண்டோ நேஷனல்ஸ் அணி விரட்டியது.

அப்போது 5ம் வரிசையில் யுவராஜ் சிங் விளையாட வந்த போது பவாத் அகமது வீசிய கூக்ளி பந்தை ஸ்வீப் ஷாட் ஆட முயன்றார்.

அப்படி செய்ய முயலும் போது முதுகில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வலியுடன் அவஸ்தைக்கு உள்ளானார் யுவராஜ் சிங். அதனால் பேட்டிங் செய்யாமல் உடனடியாக வெளியேறினார். எனினும் இலக்கு எளிது என்பதால் டொரண்டோ அணி அழகாக வெற்றி பெற்றது.

நன்றாக விளையாடி கொண்டிருந்த யுவராஜ் திடீரென மைதானத்தில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்