மின்னல் வேகத்தில் வந்த பந்தை அற்புதமாக தடுத்து பாய்ந்து பிடித்த யுவராஜ்... வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

கனடா லீக் டி20 போட்டியில் மின்னல் வேகத்தில் வந்த பந்தை யுவராஜ் சிங் அற்புதமாக கேட்ச் பிடித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியில் அற்புதமான பீல்டர் என்றழைக்கப்பட்டவர் யுவராஜ் சிங், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவரின் ஆட்டம் மற்றும் பீல்டிங் அந்தளவிற்கு இல்லாததால், அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட இவர், அதன் பின் ஐபிஎல் தொடரிலும் ஓரங்கட்டப்பட்டார்.

இதையடுத்து சரவேதசே போட்டியில் தன்னுடைய ஓய்வை அறிவித்த யுவராஜ், இப்போது கனடாவில் நடைபெற்று வரும் டி20 போட்டியில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் Brampton Wolves அணி வீரர் சிம்மன்ஸ் அடித்த பந்தை Toronto Nationals அணிக்காக விளையாடி வரும் யுவராஜ் சிங் அற்புதமாக கேட்ச் பிடித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில் முதலில் ஆடிய Toronto Nationals அணி 20 ஒவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ஓட்டங்கள் எடுத்தது. அதன் பின் ஆடிய Brampton Wolves அணி 7 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்கள் எடுத்து 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

Toronto Nationals அணிக்க ஆடிய யுவராஜ் 22 பந்துகளுக்கு 51 ஓட்டங்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர் 3 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்