இதை பார்க்க சகிக்க முடியவில்லை..! ஐசிசியை மோசமாக விமர்சித்த வேகப்புயல்

Report Print Kabilan in கிரிக்கெட்

டெஸ்ட் போட்டிக்கான வெள்ளை ஜெர்சியில் வீரர்களின் பெயரும், எண்ணும் இருப்பது சகிக்க முடியவில்லை என்று பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை ஒருநாள், டி20 தொடர்கள் போல டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரையும் ஐ.சி.சி அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது நடந்து வரும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியே, ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை போன்று, டெஸ்ட் போட்டிக்கான வெள்ளை ஜெர்சியிலும் வீரர்களின் பெயரும், எண்-ஐயும் போட்டுக்கொள்ளலாம் என்றும் ஐ.சி.சி அறிவித்தது.

அதன்படி, தற்போது நடந்து வரும் அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில், இரு அணி வீரர்களும் பெயர் மற்றும் எண் பொறித்த ஜெர்சியை அணிந்து விளையாடி வருகின்றனர்.

ஆனால், அவுஸ்திரேலிய முன்னாள் வீரர்களான கில்கிறிஸ்ட் மற்றும் பிரெட் லீ ஆகிய இருவரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது அந்த வரிசையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தரும் ஐ.சி.சியின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெர்சியில் வீரர்களின் பெயரும், நம்பரும் போட்டிருப்பது மிகவும் மோசம். டெஸ்ட் கிரிக்கெட் பாரம்பரியத்தை கெடுக்கும் வகையில் இருக்கிறது. இது போன்று செய்யக்கூடாது. அந்த முடிவை மாற்ற வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்