இலங்கை கிரிக்கெட் தொடர்பாக வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை! ஐசிசி என்ன சொன்னது தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் சபைக்கு இடைக்கால நிர்வாக சபையொன்றை நியமிப்பது தொடர்பாக விடுக்கப்பட்ட வேண்டுகோளை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) தலைவர் ஷஷாங் மனோகர் நிராகரித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தினருக்கும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இடையில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற சந்திப்பின்போது இத்தகவலை விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்ட‍ே, ஐ.சி.சி தலைவரான ஷஷாங் மனோகரை சந்தித்து பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொண்டார்.

இந்தியாவின் நாக்பூரில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இதன்போது இலங்கை கிரிக்கெட் சபைக்கு இடைக்கால நிர்வாக சபையொன்றை நியமிப்பது தொடர்பான தனது வேண்டுகோளை விடுத்திருந்தார்.

எனினும், இந்த வேண்டுகோளை ஐ.சி.சி தலைவர் ஷஷாங் மனோகர் நிராகரித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்