கோஹ்லியின் மிடில் ஸ்டம்பை தெறிக்கவிட்ட காட்ரெல்: அரிதான வீடியோ

Report Print Basu in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் இந்திய அணித்தலைவர் கோஹ்லி மிக மோசமாக போல்டானார்.

நேற்று ப்ளோரிடாவில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

இந்திய இன்னிங்ஸின் போது 16வது ஓவரை மேற்கிந்திய நட்சத்திர பந்தவீச்சாளர் காட்ரெல் வீசினார், ஓவரின் 3வது பந்தை இந்திய அணித்தலைவர் கோஹ்லி எதிர்கொண்டார், காட்ரெல் வீசிய பந்தை கோஹ்லி தவற விட பந்து மிடில் ஸ்டம்பில் பட்டு ஸ்டம்ப் அந்தரத்தில் பறந்து சென்றது.

இதைக்கண்டு, மகிழ்ச்சியடைந்த காட்ரெல், தனது அடையாள சல்யூட்டை அடித்து கொண்டாடினார். 23 பந்தில் 28 ஓட்டங்கள் எடுத்த இந்திய அணித்தலைவர் கோஹ்லி பெவிலியன் திரும்பினார். கோஹ்லி இதற்கு முன்பு அரிதாகவே மிடில் ஸ்டம்ப் போல்டாகியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இரண்டு டி 20 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரண்டு போட்டியிலும் கோஹ்லி விக்கெட்டை காட்ரெல் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்