உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் ஆனது எப்படி? ரகசியம் உடைத்த பும்ரா!

Report Print Kabilan in கிரிக்கெட்

தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்து தான் பந்துவீச கற்றுக் கொண்டதாக, இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய அணி மிக முக்கியமான பந்துவீச்சாளராகவும், சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் முதலிடத்தில் உள்ளவருமான ஜஸ்பிரிட் பும்ரா, ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை அணிக்காக அறிமுகமானார்.

அணியில் நுழைந்ததில் இருந்தே தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம், இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். மிரட்டலான பந்துவீச்சினால் எதிரணி வீரர்களை திணறடிக்கக் கூடியவராக திகழ்கிறார் பும்ரா.

இந்நிலையில், தனது சிறுவயது பந்துவீச்சு முறை ரகசியத்தை உடைத்துள்ளார். இதுகுறித்து பும்ரா கூறுகையில், ‘நான் சிறுவயதில் உலகில் உள்ள அனைத்து முன்னணி பந்துவீச்சாளர்கள், பந்துவீசும் விதத்தை தொலைக்காட்சியில் பார்ப்பேன். அதனை அவர்கள் போலவே செய்து பார்ப்பேன்.

AP

தினமும் நான் கிரிக்கெட் விளையாடும் பொழுது, ஒவ்வொரு வீரர் போன்றும் பந்துவீச முயற்சி செய்வேன். அதனை தொடர்ந்து பின்பற்றி வந்தேன். அதன் பிறகு நான் வளரும் காலத்தில் எனக்கென ஒரு பந்துவீச்சு Styleஐ உருவாக்கினேன். அதை அப்படியே பின்பற்ற தொடங்கியதால் என்னுடைய திறன் அதிகரித்தது.

பிறகு தொடர் பயிற்சியால் என் வேகமும் அதிகரித்தது. இன்று உலகின் No.1 பந்துவீச்சாளராக நான் இருக்க என்னுடைய தொடர் பயிற்சி தான் முக்கிய காரணம். என்னுடைய பந்துவீசும் முறையை மாற்றிக் கொள்ளாமல், அதிலேயே முன்னேற்றம் அடைய நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்