இந்தா பாத்துக்கோ..! வெறுப்பேற்றிய இங்கிலாந்து ரசிகர்களுக்கு வார்னர் கொடுத்த சரியான பதிலடி

Report Print Basu in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடைபெற்ற வரும் ஆஷஸ் தொடரில் தன்னை வெறுப்பேற்றிய இங்கிலாந்து ரசிகர்களுக்கு அவுஸ்திரேலிய வீரர் வார்னர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான போட்டியில் உப்புத்தாளை கொண்டு பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக அவுஸ்திரேலிய வீரர் வார்னர், அணித்தலைவர் ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் ஆகியோருக்கு ஒரு ஆண்டு சர்வதேச கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.

ஒரு வருட தடைக்கு பின் வார்னர் மற்றும் ஸ்மித் உலகக் கோப்பைக்கான அவுஸ்திரேலிய அணியில் விளையாடினர்.

இந்நிலையில் தற்போது, இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட தொடரின் போது, உப்புத்தாளை காட்டி அவுஸ்திரேலிய வீரர்களை வெறுப்பேற்றி வருகின்றனர் இங்கிலாந்து ரசிகர்கள்.

பர்மிங்காம், எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து-அவுஸ்திரெலிய இடையேயான முதல் ஆஷஸ் போட்டியின், மூன்றவாது நாளின் போது, எல்லை கோட்டிற்கு அருகே களதடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வார்னர், தன்னை உப்புதாளை காட்டி வெறுப்பேற்றிய இங்கிலாந்து ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது பேண்ட் பாக்கெட்டை எடுத்து வெளியே காண்பித்து, தன்னிடம் ஏதுவும் இல்லை என சிரித்துக்கொண்டே ரசிகர்களை நோக்கி காண்பித்து பதிலடி கொடுத்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்