தன்னை முடக்க நினைத்தவர்களை வீழ்த்தியுள்ளார்! இளம்வீரரை புகழ்ந்து தள்ளிய காம்பீர்

Report Print Kabilan in கிரிக்கெட்

கிரிக்கெட் வாழ்க்கையை முடக்க நினைத்த முன்னாள் இந்திய வீரர்களுக்கு, இளம் வீரர் நவ்தீப் சிங் சைனி பதிலடி கொடுத்துள்ளதாக முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. புளோரிடாவில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்புக்கு வெறும் 95 ஓட்டங்களே எடுத்தது. இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய நவ்தீப் சைனி 17 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தார். இந்நிலையில், நவ்தீப் சைனியை வெகுவாக புகழ்ந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில்,

‘நவ்தீப் சைனி இந்தியாவிற்காக விளையாடியதற்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் போட்டியில் பந்துவீசுவதற்கு முன்பாகவே இரண்டு விக்கெட்டுகளை எடுத்துள்ளீர்கள். அதாவது, பிஷன் சிங் பேடி மற்றும் சேத்தன் சௌகான் ஆகியோரை வீழ்த்தியுள்ளீர்கள். நவ்தீப் சைனியின் சிறப்பான ஆட்டத்தால் அவரை தடுக்க நினைத்தவர்களின் மிடில் ஸ்டெம்ப் சாய்ந்து கிடக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணம், கடந்த 2013ஆம் ஆண்டு டெல்லி அணியில் நவ்தீப் சைனியை சேர்ப்பதற்கு, அப்போதைய டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பிஷன் சிங் பேடி, துணைத் தலைவர் சேத்தன் சௌகான் ஆகியோரிடம் காம்பீர் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் சைனிக்கு டெல்லி அணியில் இடம் கிடைத்தது. கடந்த 2017ஆம் ஆண்டு நவ்தீப் சைனி, ‘தனது கிரிக்கெட் விளையாட்டிற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கவுதம் காம்பீர்’ என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்