இந்திய அணியின் வெற்றிக்கு இவர் மட்டுமே காரணம்... மேற்கிந்திய தீவிடம் தடுமாறி வெற்றி பெற்ற பின் கோஹ்லி பேட்டி

Report Print Santhan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான போட்டியில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் சைனி தான் என்று இந்திய அணியின் தலைவர் கோஹ்லி கூறியுள்ளார்.

இந்திய அணி, மேற்கிந்திய தீவு அணியுடன், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலிரண்டு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. அதில் நேற்று புளோரிடாவில் நடைபெற்ற முதல் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி நிர்ணயித்த 96 ஓட்டங்களை எட்ட முடியாமல் திணறியது.

அதன் பின் எப்படியோ ஜடேஜா நிலைத்து நின்று ஆட இந்திய அணி இறுதியாக 17.2 ஓவர்கள் 6 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றிக்கு பின் கோஹ்லி கூறுகையில், இன்று மைதானம் மிகவும் மோசமாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.

அவரிடம் நிறைய தனித்துவங்கள் உள்ளன, தனது கிரிக்கெட் பயணத்தை சிறப்பாக துவங்கியுள்ளார் சைனி, அவர் இந்திய அணிக்காக இன்னும் பல போட்டிகளை வென்று கொடுக்க வேண்டும் அது இன்றில் இருந்து துவங்கியுள்ளது.

வெற்றிக்கு இவரே முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.நவ்தீப் சைனி நேற்றைய போட்டியில் 4 ஓவர் வீசி 17 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதில் ஒரு ஓவர் மெய்டன் ஓவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்