முதல் ஓவரிலே மேற்கிந்திய தீவு அணிக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக வீரர்... மிரட்டி வரும் கோஹ்லி படை

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவு அணி தடுமாறி வருகிறது.

உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் கோஹ்லி மற்றும் ரோகித்திற்கிடையே பிரச்சனை இருப்பதாகவும், இதனால் இந்திய இரண்டாக பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் கோஹ்லி அப்படி எல்லாம் ஒன்றுமில்லை, அப்படியிருந்தால், எப்படி இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு வந்திருக்க முடியும் என்று பதிலளித்தார்.

இதையடுத்து மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதலிரண்டு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறுகிறது. அதில் முதல் போட்டி இன்று புளோரிடாவில் நடைபெற்று வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது, அதன் படி முதல் ஓவரையே தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கோஹ்லி கொடுத்தார். அதன் படி அவர் ஓவரின் 2-வது பந்தை எதிர்கொண்ட ஜான் கேம்பல் அடித்து ஆட முற்பட்டு க்ருணல் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இதையடுத்து தொடர்ந்து விளையாடி வரும் மேற்கிந்திய தீவு அணி சற்று முன் வரை 4.4 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 28 ஓட்டங்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்