இந்தியாவுக்கு எதிரான போட்டியிலிருந்து நட்சத்திர வீரர் திடீர் நீக்கம்

Report Print Basu in கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான முதல் இரு ஆட்டங்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ ரஸல் நீக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இன்று இரவு நடைபெற இருக்கும் டி-20 போட்டியில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் முதல் இரு போட்டிகளில் ஆன்ட்ரூ ரஸல் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஜாஸன் முகமது சேர்க்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மேற்கிந்தியத்தீவுகள் அணியில் இடம் பெற்றிருந்த ஜாஸன் முகமது, ஒரு ஆண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார்.

முழங்கால் காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரலிருந்து பாதியிலேயே விலகிய ரஸல், சிகிச்சை பெற்று குணமைடைந்த நிலையில் கனடாவில் நடந்துவரும் ஜி-20 போட்டியில் விளையாடினார்.

அப்போது, அந்த போட்டியில் ரஸல் பந்துவீசும் போது மீண்டும் முழங்காலில் வலி ஏற்பட்டதால் போட்டித் தொடரில் இருந்து விலகியுள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் விளையாட முடியாத நிலையையும் தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்