இலங்கை அணியே முதலிடம்... இந்தியா எல்லாம் அடுத்து தான்: வெளியான புள்ளி விவரம் இதோ

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை டி20 தொடர் லீக்கை பொறுத்தவரையில் இலங்கை அணி தான் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணி முதல் சுற்றோடு வெளியேறியது. இதையடுத்து வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட 50 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் அற்புதமாக கைப்பற்றியது.

இதனால் இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் உலகக்கோப்பை டி20 தொடரை பொறுத்த வரை இலங்கை அணியே அதிக வெற்றிகளை பெற்றுள்ளது.

35 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி அதில் 22 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இந்திய அணி 33 போட்டிகளில் 20 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 30 போட்டிகளில் 18 வெற்றிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்