உலகக்கோப்பையில் டோனிக்கு நிகழ்த்தப்பட்ட சதிக்கு இவர்கள் தான் காரணம்..! துடுப்பாட்ட பயிற்சியாளர் தகவல்

Report Print Basu in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடந்து முடிந்த 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் டோனியை 7-வது இடத்திற்கு அனுப்பியது யார் எடுத்த முடிவு என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து, அப்போட்டியில் டோனியை 7-வது வீரராக துடுப்பாட களமிறக்கியது குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்த முடிவை இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் எடுத்ததாக தகவல் பரவியதை அடுத்து அவர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய பங்கர், டோனியை 7-வது களமிறக்கியதற்கு என் மீது ஏன் பழி சுமத்தப்படுகிறது என்று கேள்வி எழுப்பியதோடு, முன்னாள் இந்திய கேப்டனை 7-வது வீரராக அனுப்பியது குழுவாக எழுத்த கூட்டு முடிவு என்று கூறினார்.

மக்கள் இந்த கோணத்தில் இருந்து என்னைப் பார்க்கிறார்கள் என்று நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் நான் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இல்லை. என்னை நம்புங்கள், நாங்கள் பல சூழ்நிலைகளை மதிப்பிட்டு செல்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் விக்கெட்டு வீழ்ச்சியைத் தடுக்கவும், இன்னிங்ஸை மீண்டும் உயிர்ப்பிக்கவும், போட்டியை முடிப்பதில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரரான டோனியை பின்னர் களமிறக்குவது குறித்தும் உடைமாற்றும் அறையில் கலந்தாலோசித்த பிறகே தினேஷ் கார்த்திக் 5 வது வீரராக அனுப்பப்பட்டார். இது குழுவாக எடுக்கப்பட்ட முடிவு என்று ரவி சாஸ்திரியே திட்டவட்டமாக கூறியுள்ளார்.

எனவே, டோனியை 7 வது இடத்திற்கு அனுப்பும் முடிவு என்னுடையது என்ற கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, இது குழுவாக எடுத்த முடிவு என இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்