இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்! பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இதற்கான இந்திய அணி இரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்குச் செல்லும் இந்திய அணி 3 டி20, 3 ஒரு நாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 3ம் திகதி தொடங்க உள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 15 வீரர்கள் கொண்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அணி விபரம்:

கார்லோஸ் பிராத்வைட் (கேப்டன்), ஜான் காம்ப்பெல், எவின் லெவிஸ், சிம்ரான் ஹெட்மியர், நிக்கோலா பூரன், கீரோன் பொல்லார்ட், ரோவ்மன் பவல், கீமோ பால், சுனில் நரைன், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ், அந்தோனி பிராம்பிள், ஆண்ட்ரே ரஸ்ஸல், கரிபியர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்