ராணுவ உடையில் கம்பீரமாக நடந்த டோனி வீடியோ.. 3 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது! தொழிலதிபரின் ட்வீட்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர் டோனி ராணுவ உடையில் நடக்கும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், குறித்த வீடியோ 3 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்ரா தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுவதை தவிர்த்த டோனி, ராணுவத்தில் பயிற்சி மேற்கொள்ள போவதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் பயிற்சி மேற்கொள்ள தலைமை ஜெனரல் அனுமதி வழங்கினார்.

அதன் பின்னர், டோனி ராணுவ உடையில் கார் ஒன்றில் இருந்து இறங்கி நடந்து வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், மஹிந்ரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்ரா, டோனி குறித்த இந்த வீடியோ மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மூன்று ஆண்டுகள் பழைய இந்த வீடியோ எனது #whatsappwonderbox-யில் இன்று பதிவிடப்பட்டுள்ளது. எம்.எஸ்.டோனி இந்த ராணுவ சீருடையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். மேலும் உங்களுக்கு வழங்கப்பட்ட வாகனத்திலும் நீங்கள் அழகாக தெரிகிறீர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த ட்வீட்டைப் பார்த்த பின்னர் தான் டோனி குறித்த வீடியோ பழையது என்பது பலருக்கு தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பலரும் அவரது ட்வீட்டுக்கு பதிலளித்து வருகிறார்கள்.

குறிப்பாக நபர் ஒருவர், நீங்கள் ஒரு சிறந்த சந்தையாளர் என ஆனந்த் மஹிந்ராவை கிண்டல் செய்துள்ளார். ஏனெனில், அந்த வீடியோவில் டோனி பயணிப்பது மஹிந்ரா நிறுவனத்தின் கார் ஆகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்