கிரிக்கெட் கிட்டை எரித்துவிட்டு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்: குமுறும் பிரபல வீரர்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

லண்டனில் நடந்த ஐசிசி கவுன்சில் கூட்டத்தில், விதிகளை மீறி செயல்பட்ட ஜிம்பாப்வே அணியை இடைநீக்கம் செய்வதாக முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்தத் தடையானது உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்தச் செய்தி ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா, ஐசிசி-யின் ஒரு முடிவு எங்களை அந்நியராக்கிவிட்டது. நிறைய மக்களின் வேலைவாய்ப்பை எடுத்துக்கொண்டது.

பல குடும்பங்களைப் பாதித்துள்ளது. பலரின் வாழ்க்கையை கேள்விக்குறியாகியுள்ளது. இப்படியான சூழலில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற விரும்பவில்லை என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, ஐசிசி-யின் முடிவை கேள்விப்பட்டதும் இதயமே சுக்குநூறாக உடைந்ததுபோல் இருந்தது.

உண்மையாக நாங்கள் இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. எங்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை இப்படி முடிவுக்கு வரும் என நாங்கள் நினைக்கவில்லை.

ஒரு வீரர் அல்ல நாட்டில் உள்ள அத்தனை வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவுக்கு வந்துள்ளது.

நான் நினைப்பதுபோல்தான் மற்ற வீரர்களும் நினைத்துக்கொண்டிருப்பார்கள். நாங்கள் இங்கிருந்து எங்கு செல்வது எனத் தெரியவில்லை என குமுறியுள்ளார்.

ஐசிசி-யின் இந்தக் கடுமையான நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துவருகிறது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்காக ஏராளமான தொகையை ஐசிசி வழங்கிவருகிறது. இந்தத் தொகைகள் அனைத்தும் முழுவதுமாக கிரிக்கெட்டுக்குப் பயன்படுத்தவில்லை.

அரசாங்கம் அந்தப் பணத்தைச் செலவு செய்துள்ளது. தரமான கிரிக்கெட் வீரர்களை உருவாக்கவில்லை என்பதே ஐசிசி-யின் வாதமாக இருக்கிறது.

இதன் காரணமாகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடைக்காலத்தடையை அடுத்து ஜிம்பாப்வே அணிக்கு வழங்கி வரும் நிதியையும் ஐசிசி நிறுத்தியுள்ளது.

ஐசிசி ஆய்வுக்குழு விசாரணைக்குப் பின்னரே ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து தெரியவரும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...