ஓய்வுக்கு பின்னரும் பந்துகளை மைதானத்திற்கு வெளியில் பறக்கவிட்ட டி வில்லியர்ஸ்

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கும் டி வில்லியர்ஸ் லண்டனில் நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் 88 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான டி வில்லியர்ஸ் கடந்த ஆண்டு மே 23ம் திகதியன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.

அதன்பிறகு ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் மட்டுமே கலந்துகொண்டு விளையாடிய டி வில்லியர்ஸ், நேற்று Middlesex - Essex அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் சிறப்பாக விளையாடி அசத்தியுள்ளார்.

Middlesex அணியின் கேப்டனாக களமிறங்கிய டி வில்லியர்ஸ், Essex அணி நிர்ணயித்த 164 ரன்கள் இலக்கை டேவிட் மாலன் உடன் சேர்ந்து 17 ஓவர்களில் கடந்து வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

போட்டியில் பந்தை நாலாபுறமும் சிதறடித்த டி வில்லியர்ஸ் 43 பந்துகளில் 88 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் அந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்