வெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணிக்கான தேர்வு திகதியை அறிவித்த பிசிசிஐ!

Report Print Kabilan in கிரிக்கெட்

வரும் 21ஆம் திகதி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்று பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய, தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற இருந்தது.

ஆனால், இந்தக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. காயத்தில் உள்ள வீரர்களின் உடற்தகுதி குறித்த அறிக்கை நாளை வரவுள்ளதால், இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இந்திய அணி தேர்வு வரும் 21ஆம் திகதி நடைபெறும் என்று பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. இதில் தேர்வு குழுவினர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுபவ வீரர் டோனி குறித்து இதில் விவாதிக்கப்படும் என்றும், முக்கிய வீரர்களான கோஹ்லி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்