யுவராஜ் சிங்கின் போட்டிக்கு பதிலடி கொடுத்த ஷிகார் தவான்... அவர் வெளியிட்ட முக்கிய வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ்சிங், பாட்டில் சேலஞ்ச் வீடியோ வெளியிட்ட நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் துவக்க வீரர் ஷிகார் தவான் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இணையத்தில் தற்போது வைரலாக சென்று கொண்டிருப்பது பாட்டில் சேலஞ்ச் வீடியோ தான், அதாவது தண்ணீர் நிரப்பியிருக்கும் பாட்டிலின் மூடியை காலால் உதைத்து திறக்க வேண்டும்.

இதை திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், மக்கள் என அனைவரும் செய்து வருகின்றனர். ஆனால் வித்தியாசமாக யுவராஜ் சிங் பந்தால், வாட்டார் பாட்டிலை துல்லியமாக அடித்து இதுவும் ஒருவகை பாட்டில் சேலஞ்ச் தான் என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஷிகார் தவான் ஆகியோருக்கு அந்த வீடியோவை டேக் செய்திருந்தார்.

தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மிகத் துல்லியமாக, ஒரே ஷாட்டில் வாட்டர் பாட்டிலை அடிக்கும் வீடியோவை ஷிகார் தவான் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்