இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் இவரா? யோசனையில் பிசிசிஐ

Report Print Kabilan in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கான பதவிக்கு விண்ணப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும், பந்துவீச்சு பயிற்சியாளராக பாரத் அருணும், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் ஆகியோரும் இருக்கிறார்கள். உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியில் தோல்வியடைந்து இந்திய அணி வெளியேறியதைத் தொடர்ந்து, புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் பி.சி.சி.ஐ இறங்கியுள்ளது.

எனவே, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வரப்போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. முன்னாள் வீரர்கள் சிலர் ஏற்கனவே இதற்காக விண்ணப்பித்துவிட்ட நிலையில், இந்த மாதம் இறுதி வரை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ள முன்னாள் நியூசிலாந்து அணி கேப்டன் ஸ்டீபன் பிளமிங், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.பி.எல்லில் மூன்று முறை சென்னை அணி பிளமிங்கின் தலைமையில் கோப்பையை வென்றுள்ளது. நியூசிலாந்து, அவுஸ்திரேலியாவில் தேசிய அளவில் தகுதி பெற்ற சில அணிகளுக்கு, வெற்றிகரமான கிரிக்கெட் பயிற்சி அளித்துள்ள பிளமிங், பி.சி.சி.ஐ அதிகாரிகளுடனும் நெருக்கமாக உள்ளார்.

எனவே, இந்திய அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் எப்போது வேண்டுமானாலும் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்