கோஹ்லி அல்லது ரோகித்..! யார் சிறந்த கேப்டன்: புட்டு புட்டு வைத்த அவுஸ்திரேலிய வீரர்

Report Print Basu in கிரிக்கெட்

விராட் கோஹ்லி, ரோகித் சர்மா இருவரில் யார் சிறந்த கேப்டன் என்ற கேள்விக்கு அவுஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் பதிலளித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியடைந்த வெளியேறியது. இதனையடுத்து, இந்தியாவின் ஒரு நாள் மற்றும் டி20 அணித்தலைவர் பதவியில் இருந்து கோஹ்லியை நீக்கிவிட்டு ரோகித் சர்மாவை நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

அதே சமயம் டெஸ்ட் அணித்தலைவராக கோஹ்லி செயல்படுவார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கோஹ்லி அல்லது ரோகித் , இருவரில் யார் சிறந்த கேப்டன் என அவுஸ்திரலேிய வீரர் பிராட் ஹாக்கிடம் இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஹாக், ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா தான் சிறந்த கேப்டன், இறுதிப்போட்டியில் அவர் கோஹ்லியை விட சிறப்பாக செயல்பட்டார்.

ஆனால், இந்திய அணிக்கான தலைவர் என்றால் அது விராட் கோஹ்லி தான், அவர் பேட்டிங், பீல்டிங் மற்றும் பயிற்சியின் போதும் அணியை சிறப்பாக வழிநடத்துவார். அவர் உலகளவில் வளம் வரும் பிட்டான இந்திய வீரர்.

கோஹ்லி உத்திகளை பயன்படுத்துவதில் திறமையானவர். எனவே என்னை பொறுத்தவரை இந்திய அணிக்கான சிறந்த தலைவர் விராட் கோஹ்லி தான் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்