ஓய்வு வேண்டாம் என தெரிவித்த கோஹ்லி! வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வு

Report Print Kabilan in கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து, மூன்று ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாட உள்ளது.

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என ஒருபுறம் பேச்சு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. எனவே, ரோஹித் ஷர்மா கேப்டன் பொறுப்பை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Reuters Photo

ஆனால், தற்போது தேர்வுக்குழுவிடம் தனக்கு ஓய்வு வேண்டாம் என்றும், அனைத்து போட்டிகளிலும் தான் விளையாடுவதாகவும் விராட் கோஹ்லி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விராட் கோஹ்லி விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்