இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன? கோஹ்லியை சுளுக்கெடுக்கவுள்ள கேள்விகளுடன் CEO

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிவிட்டு, அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதால், அதற்கு என்ன காரணம் என்பது குறித்து கோஹ்லி மற்றும் ரவிசாஸ்திரியிடம் கேள்விகளை கேட்க சிஇஒ தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகககோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி, திடீரென்று நியூசிலாந்து அணி நிரணயித்த 240 ஓட்டங்களை கூட எட்ட முடியாமல், மோசமான தோல்வியை சந்தித்தது.

இதற்கு முக்கிய காரணம் டோனியை முன்னாடியே இறக்காதது எனவும், அணியில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்நிலையில் உலகக்கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது. வருங்காலத்தில் சிறந்த அணியை எப்படி கட்டமைப்பது என்பது குறித்து தலைவர் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் சிஒஏ ஆலோசனை நடத்தும் என்று வினோத் ராய் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், பயிற்சியாளர் மற்றும் தலைவர் கோஹ்லி இருவரும் விடுமுறை முடிந்தவுடன் நாங்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவோம்.

அதேபோல் வருங்காலத்தில் எப்படி செயல்படுவது என்னது குறித்து தேர்வுக்குழு தலைவருடனும் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ரவிசாஸ்திரி மற்றும் கோஹ்லியிடம் டோனியை 7-வது இடத்தில் களம் இறக்க காரணம் என்ன?, ஒன்றரை ஆண்டுகளாக நான்காவது இடத்திற்கு அம்பதி ராயுடுவை தயார் செய்துவிட்டு, உலகக்கோப்பைக்கான அணியில் சேர்க்காதது ஏன்? போன்ற கேள்விகள் கேட்கப்படும் என கூறப்படுகிறது.

வினோத் ராய் (தலைவர்), டயானா எடுல்ஜி, ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் ரவி தோட்ஜே ஆகியோர் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகக்குழுவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்