உலகக்கோப்பை வரலாற்றையே மாற்றி எழுதப் போகும் இங்கிலாந்து-நியூசிலாந்து! மறைந்திருக்கும் முக்கிய சாதனை

Report Print Santhan in கிரிக்கெட்

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக்கோப்பை கிரிக்கெட் போடி கடந்த மே மாதம் 30-ஆம் திகதி இங்கிலாந்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் தொடர் துவங்குவதற்கு முன்பே இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் தான் உலகக்கோப்பையை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது.

அதன் படியே இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதிப் போட்டி நூலிழையில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றையே மாற்றி எழுதப் போகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த உலக்கோப்பை போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் கோப்பையை கைப்பற்றியதே இல்லை.

ஆனால் அதை எல்லாம் உடைக்கும் வகையில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதனால் கோப்பை வாங்காத இரண்டு அணிகளில் ஒரு அணி கோப்பையை கைப்பற்றவுள்ளதால், இந்த போட்டியை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்