உலக்கோப்பையை இந்த அணி தான் வெல்லும்! உண்மையாகி போன கணிப்பு.. எப்படி தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை ஜெயிக்கும் அணி கோப்பையை வெல்லும் என மைக்கேல் வாகன் கடந்த மாதம் கணித்திருந்த நிலையில் அது பாதி உண்மை என உறுதியாகியுள்ளது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மைக்கேல் வாகன் கடந்த மாதம் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.

அப்போது, இந்திய அணியை உலகக்கோப்பை தொடரில் எந்த அணி ஜெயிக்கிறதோ அந்த அணி தான் கோப்பையை வெல்லும் என கூறினார், அதே போல இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் உலக்கோப்பை தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டிவிட்டது.

இத்தொடரில் இந்தியாவை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மட்டுமே வீழ்த்தியுள்ளன.

லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தும், அரையுறுதியில் நியூசிலாந்தும் இந்தியாவை வீழ்த்தின. இந்த சூழலில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் தான் இறுதி போட்டியில் மோதவுள்ளன.

ஆகவே இந்தியாவை வீழ்த்தும் அணி உலகக்கோப்பையை வெல்லும் என வாகன் கூறியது பாதி உண்மையாகவுள்ளது.

ஏனெனில் இந்த இரு அணிகளும் இந்தியாவை வீழ்த்தியுள்ள நிலையில் அதில் ஒன்று தான் உலகக்கோப்பையை வெல்லவுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...