இந்தியா-நியூசிலாந்து போட்டி மழையால் பாதிப்பு... ஏக்கத்துடன் பார்த்த டோனி மகளின் அழகான புகைப்படம்

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், அதை டோனியின் மகள் ஒரு வித ஏக்கத்துடன் பார்க்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து மான்செஸ்டரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுகிடையேயான அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி அற்புதமாக பவுலிங் செய்து, நியூசிலாந்து அணியை 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 211 ஓட்டங்களுக்குள் சுருட்டி வந்தது. ஆனால் போட்டியின் போது திடீரென்று மழை குறுக்கிட்டதால், போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.

மழையால் போட்டி பாதிக்கப்பட்டால், நாளை இன்று எதிலிருந்து போட்டி பாதிக்கப்பட்டதோ, அதிலிருந்து துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியின் மகள், மழை பெய்து கொண்டிருக்கும் போது, மைதானத்தை ஒரு வித ஏக்கத்துடன் பார்க்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்