இந்தியா-நியூசிலாந்து போட்டி மழையால் பாதிப்பு! யாருக்கு இறுதிப் போட்டி வாய்ப்பு அதிகம்?

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால், யாருக்கு வாய்ப்பு அதிகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரிர்ல் இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால், போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த போட்டி நிறுத்தப்பட்டாலோ அல்லது ஓவர் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டாலோ என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.

நியூஸிலாந்து இனி பேட் செய்யவில்லை எனில், டக்வொர்ட் லூயிஸ் ஸ்டெர்ன் விதிப்படி இந்தியா 46 ஓவர்களில் 237 ஓட்டங்கள் எடுக்கவேண்டும். ஒருவேளை போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டால், இந்தியா சேஸிங்கில் 148 ஓட்டங்கள் எடுக்க வேண்டும்.

அரையிறுதி, இறுதிப் போட்டிகளின்போது மழை பெய்தால், ரிசர்வ் டே எனப்படும் மறுநாளில் போட்டி தொடங்கும். முந்தைய நாள் எந்த இடத்தில் ஆட்டம் நிறுத்தப்பட்டதோ, அதிலிருந்தே போட்டி தொடங்கும்.

அப்படி அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி டையில் முடிந்தால், ஆட்டத்தின் முடிவு ஓவர் முறையில் தீர்மானிக்கப்படும்.

ஒரு வேளை அரையிறுதி போட்டி ரத்துசெய்யப்பட்டால், குரூப் சுற்றில் முன்னணியில் இருக்கும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் இருக்கும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்