புதிய வரலாறு படைக்கப்போகும் டோனி! 16 ஆண்டுகால சாதனையை தகர்க்க உள்ள ரோஹித் ஷர்மா

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரின் இன்றைய அரையிறுதிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் டோனி, ரோஹித் ஷர்மா ஆகிய இரண்டு வீரர்களும் புதிய உலக சாதனைகளைப் படைக்க காத்திருக்கிறார்கள்.

மான்செஸ்டர் நகரில் இன்று நடக்கும் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி சாதனையை ஒன்றை படைக்க உள்ளார்.

அதாவது, டோனிக்கு இது 350வது ஒருநாள் போட்டியாகும். எனவே, 350 போட்டிகளில் பங்கேற்கும் முதல் விக்கெட் கீப்பர் என்ற பெற உள்ளார். அத்துடன் சச்சின் டெண்டுல்கருக்கு (463) பின், அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைக்க உள்ளார்.

ஒட்டுமொத்தமாக 350 போட்டிகளில் விளையாடும் 10வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெறுவார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர்(463), ஜெயவர்த்தனே(448), சங்ககாரா(404), அப்ரிடி(398), இன்ஸமாம்-உல்-ஹக்(378), ரிக்கி பாண்டிங்(375), வாசிம் அக்ரம்(356), முத்தையா முரளிதரன்(350) ஆகியோர் விளையாடியுள்ளனர்.

மேலும், 350 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் டோனி பெற உள்ளார். இதற்கு முன்பு இலங்கை முன்னாள் வீரர் சங்ககாரா 360 போட்டிகளில் விளையாடியிருந்தாலும், அவர் 44 போட்டிகளில் துடுப்பாட்ட வீரராக மட்டுமே செயல்பட்டார்.

Reuters Photo

எனவே, டோனி புதிய வரலாற்றை படைக்க உள்ளார். இதேபோல், இந்திய துணைத்தலைவர் ரோஹித் ஷர்மா 16 ஆண்டுகால சாதனை ஒன்றை தகர்க்க உள்ளார். அவர் நடப்பு தொடரில் 647 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இன்னும் 27 ஓட்டங்கள் எடுத்தால், சச்சினின் சாதனையை அவர் முறியடிப்பார்.

கடந்த 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் 673 ஓட்டங்கள் குவித்ததே இதுவரை சாதனையாக உள்ளது. எனவே, ரோஹித் ஷர்மா அதனை முறியடிக்க வாய்ப்பு உள்ளதுடன், 53 ஓட்டங்கள் எடுத்தால் 700 ஓட்டங்களை உலகக்கோப்பையில் குவித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.

ஒருவேளை அவர் சதம் விளாசி விட்டால், உலகக்கோப்பையில் அதிக சதங்கள் (6) அடித்த வீரர் என்ற சாதனையையும் படைப்பார்.

PTI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்