அரையிறுதியில் இந்தியாவை எப்படி வீழ்த்திப் போகிறோம்? ரகதியத்தை உடைத்த நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியை எப்படி வீழ்த்துவோம் என்று நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில், இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இதில் இன்று நடைபெறவிருக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஐசிசி நடத்தும் முக்கிய தொடர்களில் இந்திய அணி, நியுசிலாந்திடம் திணறியே வருவதால், இன்றைய போட்டியிலும் அந்த நிலை நீடிக்குமா என்ற அச்சம் இந்திய ரசிகர்களிடையே இருக்கும், நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் அரையிறுதிப் போட்டி குறித்து கூறுகையில், இது எங்களுக்கு மற்றுமொரு கிரிக்கெட் போட்டி. யார் எங்களுக்கு எதிராக களத்தில் உள்ளார்கள் என்பதை கவனிக்காமல், விக்கெட் எடுப்பதையே நோக்கமாக கொண்டு தீவிரவமாக செயல்படுவோம்.

அரையிறுதிக்கு முன்னேற தகுதி பெற்றிருக்கும் அணிகளில் நாங்களும் ஒருவர். இன்றைய ஆட்டம் மட்டுமே எங்கள் கவனத்தில் உள்ளது. இந்திய அணிக்கு ரோகித் சர்மா அற்புதமான பார்மில் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அவரை வீழ்த்துவதற்கான அனைத்து யுக்திகளையும் பயன்படுத்துவோம். அதுமட்டுமின்றி, இது எங்களுக்கு முக்கியமான ஒரு போட்டி. சிறப்பாக விளையாடுவதையே நோக்கமாக கொண்டு ஆடவேண்டும். அதை சிறப்பாக செய்வோம், இந்தியாவை வீழ்த்தும் திறமை எங்களிடம் இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்