என் வழி தனி வழி... தனது ஸ்டையில் போத்தல் மூடி சேலஞ்சை செய்த யுவராஜ் சிங்! வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

சமூக வலைதளங்களில் தற்போது போத்தல் கேப் சேலஞ்ச் வைரலாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் தனது ஸ்டையில் செய்து காட்டி அசத்தியுள்ளார்.

அவ்வப்போது ஏதாவது ஒரு சவாலை செய்து, அதனை சமூக வலைதளங்களில் வீடியோவாக பலர் வெளியிட்டு வைரலாக்கி வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

அதன்படி 10 years challenge, kiki challenge, vaccum challenge, ice bucket challenge ஆகியவற்றைத் தொடர்ந்து, தற்போது bottle cap challenge என்ற சவால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது, போத்தல் ஒன்று முன் இருக்க, அதன் மூடியை ‘Kick' செய்து கழற்ற வேண்டும் என்பதே இந்த சவால்.

ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், தமிழ் திரைப்பட நடிகர் அர்ஜூன் ஆகியோர் உட்பட பல பிரபலங்கள் இதனை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தன்னுடைய ஸ்டையில் இந்த சவாலை செய்து முடித்துள்ளார்.

அவர் தனக்கு எதிரே இருக்கும் போத்தலின் மூடியை குறி பார்த்து துடுப்பாட்டம் செய்கிறார். அவருக்கு வீசப்பட்ட பந்தை சரியாக போத்தலின் மூடி மீது படும்படி அடிக்கிறார். மூடி திறந்து விடுகிறது.

இந்த ஸ்டைல் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதால், ரசிகர்களுடன் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் யுவராஜ் சிங்கை பாராட்டி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்