இந்த முறை நீ அவுட்... வங்கதேச வீரரை சொல்லி காட்டி வெளியேற்றிய கோஹ்லி வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது சவுமியா சர்காரின் விக்கெட்டை வீழ்த்திய பின்பு, கோஹ்லி அவரிடம் நீ அவுட் என்று கூறிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா-வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 314 ஓட்டங்கள் எடுத்தது. அதன் பின் ஆடி வரும் வங்கதேச அணி சற்று முன் வரை 15.1 ஓவருக்கு 74 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட் இழப்பிற்கு ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியின் போது, சவுமியா சர்காருக்கு ஷமி வீசிய ஓவரின் போது எல்.பி.டபில்யூ கேட்கப்பட்டது.

ஆனால் நடுவர் அவுட்டில்லை என்று கூறியவுடன், கோஹ்லி ரிவ்யூ கேட்க அது மூன்றாவது நடுவரிடம் சென்றது.

அப்போது மூன்றாவது நடுவர் பேட்டில் பட்டது போன்று அவுட்டில்லை என்று கூறினார். இதனால் கோஹ்லி நடுவர்களிடம் சில நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் ஆட்டத்தின் பாண்ட்யா வீசிய 15.1-வது ஓவரின் போது சவுமியா சர்கார் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக், உடனே கோஹ்லி நீ அவுட் என்று செய்கை செய்து காட்டினார்.

இதைக் கண்ட சவுமியா சர்கார் சற்று கோபமான முகத்துடனே வெளியேறினார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்