டோனியின் சொதப்பல் கீப்பிங்கிலும் தொடருகிறது... குறையும் கோஹ்லியின் நம்பிக்கை?

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் டோனி பேட்டிங்கில் மட்டுமின்றி கீப்பங்கிலும் சொதப்பியுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் டோனியின் பேட்டிங் மந்தமாக இருப்பதாக சச்சின் உட்பட பல முன்னணி வீரர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் டோனியின் ஆட்டம் நல்ல விதமாகவே இருப்பதாக இந்திய அணியின் தலைவர் கோஹ்லி மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் டோனிக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய உலகக்கோப்பை தொடரில் டோனி பேட்டிங்கில் தான் அப்படி என்று பார்த்தால், கீப்பிங்கிலும் சொதப்பி வருகிறார்.

இந்த உலகக் கோப்பையில் சிறந்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் அவுஸ்திரேலியா விக்கெட் கீப்பர் கேரி முதல் இடத்தில் உள்ளார்.

கேரி 18 அவுட்டுகளுக்கு காரணமாக இருந்துள்ளார். ஆனால் டோனி 6 இன்னிங்ஸ்களில் 4 பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்க மட்டுமே காரணமாக இருந்துள்ளார்.

அதில், இரண்டு ஸ்டம்பிங், இரண்டு கேட்ச்கள். டி.ஆர்.எஸ் முறையிலும் டோனி தவறிழைத்துவிட்டார் என்றே கூறலாம்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 20 ஓட்டம் எடுத்திருந்த போது ஜேசன் ராயின் விக்கெட்டை இந்தியா வீழ்த்தியிருக்க முடியும்.

டி.ஆர்.எஸ் கேட்க கோஹ்லி பெரும்பாலும் டோனியை நம்பியிருந்தார். ஆனால் டோனி அமைதியாக இருக்க, கோஹ்லியும் கேட்காமல் விட்டார். முடிவில் 66 ஓட்டங்கள் எடுத்த பிறகே ஜேசன் அவுட் ஆனார்.

இதனால் டோனி மீது கோஹ்லி டி.ஆர்.எஸ் முறையில் வைத்திருந்த நம்பிக்கை குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers