கடைசி கட்டத்தில் சொதப்பிய டோனி... வங்கதேச அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் வங்கதேச அணிக்கு இந்திய அணி இலக்கை நிர்ணைத்துள்ளது.

இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய ரோஹித் ஷர்மா-கே.எல்.ராகுல் ஜோடி வங்கதேசத்தின் பந்துவீச்சை புரட்டி எடுத்தது. துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி 90 பந்துகளில் சதம் விளாசினார்.

இது அவருக்கு 26வது சர்வதேச ஒருநாள் சதமாகும். பின்னர் சவுமியா சர்காரின் பந்துவீச்சில் 104 (92) ஓட்டங்களில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 5 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும்.

இந்த சதத்தின் மூலம் ரோஹித் ஷர்மா 2019 உலகக்கோப்பையில் 500 ஓட்டங்களை கடந்து முதலிடம் பிடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து வந்த கோஹ்லி 26 ஓட்டங்கள், ரிஷப் பாண்ட் 48 ஓட்டங்கள், ஹார்திக் பாண்ட்யா டக் அவுட்டாக, கடைசி கட்டத்தில் டோனி மந்தமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதால் 350 ஓட்டங்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி இறுதியாக 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ஓட்டங்கள் எடுத்தது.

டோனி 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். வங்கதேச அணியில் வேகப்பந்து வீச்சாளர் முதபிசுர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்