12 ஆண்டுகளுக்கு பின் உலகக் கோப்பையில் களமிறங்கும் தமிழக வீரர்

Report Print Basu in கிரிக்கெட்

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக 12 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று வங்கதேச அணிக்கு எதிரான உலகக் கோப்பையில் போட்டியில் களமிறங்குகிறார்.

பர்மிங்காம், எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், இந்தியா-வங்கதேச அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாகும். நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்து விளையாடி வருகிறது.

தமிழக வீரர் விஜய் சங்கர் தொடரிலிருந்து விலகிய நிலையில், அணியில் யார் இடம்பிடிப்பார் என அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான இந்திய அணியில் ஜாதவ்-க்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் காரத்திக் இடம்பிடித்துள்ளார். அதே சமயம் குல்திப் யாதவ்-க்கு பதிலாக காயம் காரணமாக ஓய்வில் இருந்த புவனேஷ் குமார் அணியில் இடம்பிடித்துள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய தினேஷ் கார்த்திக், தற்போது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் வங்கதேச அணிக்கு எதிராக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி அதிர்ச்சிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers