இங்கிலாந்து போட்டியில்!... இரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய டோனி- வைரல் புகைப்படம்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் டோனி ரத்தம் காயத்துடன் விளையாடிய புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்ததால், டோனியின் மந்தமான ஆட்டம் தான் காரணம் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

ஆனால் இந்திய அணியின் தலைவர் கோஹ்லி, பிட்ச் மிகவும் பிளாட்டாக இருந்தது, அதுமட்மின்றி இங்கிலாந்து வீரர்கள் அற்புதமாக பந்து வீசினர் என்று டோனிக்கு ஆதரவாக பேசினார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியின் போது, டோனிக்கு இரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பவுன்சர் பந்து கையில் பட்டதில் டோனி விரலில் காயம் ஏற்பட்டது. இதை டோனி முதலில் கவனிக்கவில்லை.

அதன்பின் அந்த காயம் காரணமாக அவரின் விரலில் ரத்தம் வந்துள்ளது. ரத்தம் கிளவுஸில் வெளிப்படையாக தெரிந்தது. அதன்பின்பே ரத்தம் வருவதை டோனி கவனித்துள்ளார்.

அதன் பின் டோனி இரத்தம் வழிந்த கையோடு விளையாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைக் கண்ட இணையவாசிகள் பலரும் டோனியின் ஆட்டம் மந்தமாக இருந்தாலும், காயத்தை கூட பொருட்படுத்தாமல் விளையாடியுள்ளார் என்று பாராட்டி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்