அந்த நொடி பயந்தேன்.. இது தான் எனக்கு கைகொடுத்தது.. மேத்யூஸ் ஓபன் டாக்

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கை வெற்றிக்கு முக்கிய காரணமான மேற்கிந்திய தீவுகள் துடுப்பாட்டகாரர் பூரனை வீழ்த்த முடிந்த காரணத்தை மேத்யூஸ் கூறியுள்ளார்.

தென் ஆப்பரிக்காவுடனான வெற்றிக்கு பின் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட இலங்கை வீரர் மேத்யூஸ் கூறியதாவது, எட்டு மாதங்களாக எந்தவொரு வலைப் பயிற்சியிலும் பந்து வீசாமல், முதல் தடவையாக மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் பந்து வீசி, அணியின் வெற்றிக்கு தேவையான நிக்கோலஸ் பூரனின் விக்கெட்டை வீழ்த்த முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

பூரன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் யாரையாவது பந்துவீச அழைப்பதற்கு திமுத் தேடினார். அப்போது, 48வது மற்றும் 50வது ஓவர்களை நான் வீசுகிறேன் என கூறினேன்.

ஆனாலும், நான் சற்று பயத்துடன் தான் பந்து வீசினேன், எனினும், எனது அனுபவம் அந்த இடத்தில் கைகொடுத்தது. எனக்கு எந்த இடத்தில் பந்துவீசினால் பூரனின் விக்கெட்டை வீழ்த்த முடியும் என்ற திட்டம் இருந்தது. இறுதியில் அவருடைய விக்கெட்டை வீழ்த்தினேன் என மேத்யூஸ் தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்