இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டோனி ஆமை வேகத்தில் விளையாட இதுதான் காரணமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்தாலும், அதன் மூலம் இந்திய அணிக்கு நன்மை ஒன்று நிகழ்ந்து இருக்கிறது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையில் இன்று உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடக்கிறது. இந்த தொடரில் தோல்வியையே ருசிக்காமல் இருந்த இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி அடைந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கு எதிராக மொத்தம் 50 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்தது. அதன்பின் இந்தியா ஐம்பது ஓவரில் 306 ரன்கள் மட்டும் எடுத்தது.

இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக டோனி மற்றும் கேதார் ஜாதவ் மிகவும் பொறுமையாக ஆடினார்கள். இவர்களின் மெதுவான ஆட்டத்திற்கு நிறைய காரணங்கள் இருப்பதாக தெரிவிக்கிப்படுகிறது. இந்திய அணி தோல்வி அடைய போகிறது என்று தெரிந்தேதான் இவர்கள் விளையாடினார்கள்.

ஆனால் அதிக ரன்கள் எடுத்து தோல்வி அடைய வேண்டும் விளையாடினார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதாவது இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் மிகவும் அதிரடியாக ஆடி, ஒருவேளை வேகமாக விக்கெட்டுகள் விழுந்து இருந்தால், சீக்கிரமாக, குறைந்த ரன்களில் தோல்வி அடைந்து இருக்கும்.

பெரும்பாலும் இந்திய அணி 290 ரன்களுக்கு முன்பாகவே அவுட்டாகி இருக்கவோ, தோல்வி அடைந்து இருக்கவோ வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும்.

ஆனால் டோனி மற்றும் கேதாரின் நிதான ஆட்டம் காரணமாக இந்தியா 300+ ரன்களை எடுத்த பின்புதான் தோல்வி அடைந்தது.

இதனால் இந்தியா 2 புள்ளிகளை இழந்தாலும், ரன் ரேட்டிற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. சரியான ரன் ரேட் மூலம் இந்தியா தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

இது வரும் போட்டிகளில் இந்தியாவிற்கு உதவ போகிறது. தோல்வி அடைய போகிறோம் என்று தெரிந்த பின்பே இப்படி புத்திசாலிதானமாக விளையாடினார்கள் எனப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்