இந்தியா வீழ்த்த முடியாத அணி அல்ல.. நாங்கள் செய்து முடிப்போம்! இலங்கை அணி வீரர் சவால்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய அணி வீழ்த்த முடியாத அணி அல்ல என்று இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் தனஞ்செயா டி சில்வா தெரிவித்துள்ளார்.

செஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது. இந்த உலகக்கோப்பை 8 போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி, 3 வெற்றி 3 தோல்விகளை சந்தித்துள்ளது.

அடுத்ததாக ஹெடிங்லியில் நடக்க இருக்கும் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இலங்கை அணி. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் கூட இலங்கை அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாது.

இந்நிலையில், இலங்கை அணி வீரர் தனஞ்செய டி சில்வா இந்தியாவுடனான போட்டி குறித்து கூறுகையில், ‘இந்திய அணி ஒன்றும் வீழ்த்த முடியாத அணி அல்ல. கடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியை வென்றிருக்கிறோம்.

ஐ.சி.சி போட்டிகளில் எல்லாம் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறோம். வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அதிகமான நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வென்று போட்டியை உயர்ந்த இடத்தில், அதாவது முடிப்போம்.

இந்திய அணியை எங்களால் வெல்ல முடியும். ஒவ்வொரு போட்டியையும் வெல்வதற்காகவே முயற்சித்து வருகிறோம். இந்திய அணியை நாங்கள் தோற்கடித்தால், உலகக்கோப்பைத் தொடரில் 5வது இடத்துக்கு உயர்வோம்’ என தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி கடைசியாக இந்திய அணிக்கு எதிராக விளையாடிய 8 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்