என்ன! நான் பிரதமரா.. என்னை கொல்ல விரும்புகிறீர்களா? வங்கதேச கேப்டனை அதிர வைத்த கேள்வி

Report Print Kabilan in கிரிக்கெட்

இன்னும் பத்து ஆண்டுகளில் உங்களை பிரதமராக பார்க்கலாமா? என்று வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனிடம் கேள்வி எழுப்பி, பத்திரிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சியளித்தார்.

உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதுகின்றன. வங்கதேச அணி 3 வெற்றி, 3 தோல்வி மற்றும் ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை என 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

எனவே, எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய முடியும். இந்திய அணியைப் பொறுத்தவரை இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலே அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

இந்நிலையில் வங்கதேச அணித்தலைவர் மோர்தசா, இந்திய அணியுடனான போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், ‘இன்னும் பத்து, பதினைந்து ஆண்டுகளில் வங்கதேசத்தின் பிரதமராக உங்களைப் பார்க்கலாமா?’ என்று அவரிடம் கேள்வி எழுப்பினார்.

Getty

அதற்கு மோர்தசா, ‘ஏன், என்னை கொல்ல விரும்புகிறீர்களா?’ என்று கிண்டலாக பதிலளித்து சிரித்தார். அதன் பின்னர், கிரிக்கெட் வீரர்களை சமூக வலைதளங்களில் விமர்சிப்பது குறித்து பேசிய அவர் கூறுகையில்,

‘நாங்களும் மனிதர்கள் தான். எல்லை தாண்டி வீரர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை எதிர்கொள்வது கடினமானது. கிரிக்கெட் வீரர்கள் அதை கண்டு கொள்ளாமல் தவிர்த்துவிட வேண்டும்.

இரண்டு நாட்டு அணிகள் மோதும்போது, இரு அணிகளுமே வெற்றி பெறுவதற்கு தான் போராடும். ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரவளிக்க வேண்டும். ஆனால், அது கண்ணியமற்றதாகி விடக் கூடாது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்