முதல் சதத்தை உலகக்கோப்பையில் அடித்த இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்!

Report Print Kabilan in கிரிக்கெட்

செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நேற்று நடந்த லீக் போட்டியில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் இளம் வீரர்கள், தங்களது முதல் சதத்தை விளாசிய சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.

ஏறக்குறைய உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய நிலையில், இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நேற்று நடந்தது.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 338 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ஓட்டங்களே எடுத்ததால், 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இலங்கை அணி தரப்பில் இளம் வீரரான அவிஷ்கா பெர்னான்டோ 103 பந்துகளில் 2 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 104 ஓட்டங்கள் குவித்தார். இது அவருக்கு முதல் சர்வதேச சதம் ஆகும்.

அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் இளம் வீரரான நிக்கோலஸ் பூரன் 103 பந்துகளில் 4 சிக்சர்கள், 11 பவுண்டரிகளுடன் 118 ஓட்டங்கள் விளாசினார். இது அவருக்கு முதல் சர்வதேச சதம் ஆகும்.

Reuters

இருவருமே தங்களது முதல் சதத்தை உலகக்கோப்பையில் அடித்துள்ளனர், அதுவும் ஒரே போட்டியில் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்