அடிச்சு சொல்றேன் இவங்க தான் அரையிறுதிக்கு போவாங்க: மைக்கேல் வாகன்!

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

இந்தாண்டு உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளை முன்னாள் இங்கிலாந்து அணித் தலைவர் மைக்கேல் வாகன் கணித்துள்ளார்.

இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் லீக் போட்டிகள் வரும் 6 ஆம் திகதி முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறுகிறது.

அவுஸ்திரேலியா அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. எஞ்சியுள்ள 3 இடங்களுக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, அணிகளுடன், பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளது.

இதனால் உலகக்கிண்ணம் தொடர் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இதற்கிடையில் முன்னாள் இங்கிலாந்து அணித் தலைவர் மைக்கேல் வாகன், உலகக்கிண்ணம் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளை கணித்துள்ளார்.

அதில் இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியா, இங்கிலாந்து போட்டியின் முடிவுக்கு பின்னர் பார்க்கும் போது அரையிறுதியில் அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளும்,

மற்றொரு அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகளும் மோதும் என நினைக்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்