சூப்பர் மேனாக மாறிய ஜடேஜா.. தவறாக தீர்ப்பளித்த நடுவர்: கொந்தளிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்

Report Print Basu in கிரிக்கெட்

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்த அணி ஆரம்ப துடுப்பாட்டகாரர்கள் சிறப்பான தொடக்கத்தை தந்துள்ளனர்.

ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி இங்கிலாந்திற்கு சிறப்பான தொடக்கத்தை தந்தது. இங்கிலாந்து அணி 160 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. 23வது ஓவரில் குல்தீப் யாதவ் பந்தை, ஜேசன் ராய் பறக்க விட, சூப்பர மேனாக மாறிய ஜடேஜா அந்தரத்தில் கேட்ச் பிடித்து அசத்தினார்.

இருப்பினும், இங்கிலாந்து இன்னிங்ஸின் 11வது ஓவரின் ஐந்தாவது பந்தில், ஹார்திக் பாண்டியா இந்தியாவுக்கு முதல் திருப்புமுனையை ஏற்படுத்தினார். ஆனால் நடுவர் அலீம் தார், இந்திய அணிக்கு எதிரான தனது முடிவை தீர்ப்பாக அளித்தார்.

ஹார்திக் பாண்டியா வீசிய பந்தை ராய், அடிக்க முயற்சி செய்தார், எனினும், பந்து நேராக விக்கெட் கீப்பர் டோனியிடம் செல்ல, அவர் பந்தை பிடித்தார். பந்து ராயின் கையுறையில் பட்டு சென்றதை கவனித்த பாண்டியா மற்றும் இந்திய அணித்தலைவர் கோஹ்லி, நடுவர் அலீம் தாரிடம் அவுட் என முறையிட்டனர்.

ஆனால், இல்லை என மறுத்த நடுவர், அகலபந்து என அறிவித்தார். டிஆர்எஸ் கேட்பது குறித்து கோஹ்லி, டோனியிடம் கேட்க அவர் வேண்டாம் என தெரிவித்தார். பின்னர், வீடியோவை பார்த்த போது பந்து கையுறையில் பட்டுச் சென்றது தெரியவந்தது.

தவறான தீர்ப்பளித்த பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் அலீம் தாரை, பாகிஸ்தான் மற்றும் இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தான் ரசிகர்கள் விமர்சிப்பதற்கு காரணம், இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தினால் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பிற்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்பதால் தான்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்