என்ன கொடுமை இது! இந்திய ரசிகர்களால் புலம்பும் இங்கிலாந்து ரசிகர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்தியா-இங்கிலாந்து இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டியை காண இந்திய ரசிகர்களே அதிகம் பேர் வந்துள்ளனர்.

பெர்மிங்காமில் நடந்து உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் இந்திய ரசிகர்களே அதிகம் ஆக்கிரமித்திருந்தனர்.

டிக்கெட் விற்பனையின்போது 55 சதவித டிக்கெட்டுகள் இந்திய ரசிகர்களுக்கும், 42 சதவித டிக்கெட்டுகள் இங்கிலாந்து ரசிகர்களுக்கும் விற்கப்பட்டுள்ளது. இதனால் மைதானத்தில் உள்ள 24,500 இருக்கைகளில், சுமார் 13,500 இருக்கைகளை இந்திய ரசிகர்கள் ஆக்கிரமித்துள்ளதாக தெரிகிறது.

இவை தவிர இங்கிலாந்து ரசிகர்கள் பலர், தங்களது டிக்கெட்டுகளை அதிக விலைக்கு இந்திய ரசிகர்களுக்கு விற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தீவிர இங்கிலாந்து ரசிகர்கள் தங்கள் அணிக்கு மைதானத்தில் இருந்து உற்சாகமளிக்காத நிலையில் உள்ளனர். எனவே, அவர்கள் ஏமாற்றத்தில் இருப்பதாக தெரிகிறது.

இதனை நிரூபிக்கும் வகையில், முன்னாள் இங்கிலாந்து வீரரான மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘Edgbaston மைதானத்தில் நான் எண்ணியபடி அணி மற்றும் நிர்வாகத்தையும் சேர்த்து 86 இங்கிலாந்து ரசிகர்களே வந்துள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்