தமிழக வீரர் அவுட்..! இங்கிலாந்து எதிரான போட்டியில் இளம் வீரருக்கு வாய்ப்பு

Report Print Basu in கிரிக்கெட்

உலகக் கோப்பை தொடரில் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்த் களமிறங்கியுள்ளார்.

பர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து-இந்தியா அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க இப்போட்டியில் கட்டாய வெற்றிப்பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்து களமிறங்கி விளையாடி வருகிறது. இந்திய அணியில் தமிழக வீரர் விஜய் சங்கருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்த் களமிறங்கியுள்ளார்.

காயம் காரணமாக இந்திய நட்சத்திர வீரர் தவான் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியதை அடுத்து ரிஷப் பந்த் இந்திய அணியில் இணைந்தார்.இடது கை துடுப்பாட்டகாரரன ரிஷப் பந்த், ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்