அரங்கில் பறந்த பொத்தல்கள்.. சரமாரியாக அடித்துக்கொண்ட ஆப்கான்-பாகிஸ்தான் ரசிகர்கள்!

Report Print Kabilan in கிரிக்கெட்

லீட்ஸ் நகரில் நடந்த ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், இருநாட்டு ரசிகர்களும் கடுமையாக மோதிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

உலகக்கோப்பை தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் அணிகள் மோதின. லீட்ஸில் நடந்த இந்தப் போட்டியில் இரண்டு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் ஏராளமானோர் அரங்கத்தில் கூடியிருந்தனர்.

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 227 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. 40 ஓவர்களுக்கு பின் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் நிலையில் இருந்தது.

ஆனால், பந்துவீச்சாளர்கள் சொதப்பியதால் வெற்றி பாகிஸ்தான் வசம் சென்றது. இதற்கிடையில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கும், ஆப்கானிஸ்தான் ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. அப்போது இருநாட்டு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். அரங்கில் இருநாட்டு ரசிகர்களும் பொத்தல்கள், நாற்காலிகளை வீசி சண்டையிட்டனர். ஆனால், பாதுகாவலர்கள் இந்த சண்டையை தடுக்க முன்வரவில்லை.

நீண்ட நேரம் இந்த சண்டை நீடித்தது. பின்னர் இருநாட்டு ரசிகர்களும் அமைதியாக அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த காட்சியை பத்திரிகையாளர் ஒருவர் வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,

‘அரங்கில் மிகப்பெரிய சண்டை நடக்கிறது. பொத்தல்கள் பறக்கின்றன. ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள். அனைத்தும் தூக்கி வீசப்படுகின்றன. இந்த சண்டையை தடுக்க பாதுகாவலர்கள் யாரும் இல்லையா. பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானை வென்றதும் இருநாட்டு ரசிகர்களும் இடையே அடிதடி தொடங்கிவிட்டது. அசிங்கமாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்