டோனியின் நடராஜர் ஷாட் இது தான்... கோஹ்லியுடன் ஓப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்ட CSK

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் டோனி மற்றும் கோஹ்லி இருவருமே ஒரே மாதிரியான ஷாட அடித்த புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி பட்டையை கிளப்பி வருகிறது. இதையடுத்து இன்று இந்தியா-இங்கிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் டோனி மற்றும் கோஹ்லி ஆகியோரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படம் உலகக்கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான ஆட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும், அந்த போட்டியில் இரண்டு பேரும் ஒரே மாதிரியான் ஷாட் அடித்ததாகவும், இதற்கு பெயர் தான் நடராஜர் ஷாட் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்