உலகக் கோப்பையில் இருந்து இலங்கை நட்சத்திர வீரர் விலகல்: புதிய வீரர் இணைகிறார்

Report Print Basu in கிரிக்கெட்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரிலிருந்து இலங்கை நட்சத்திர பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் விலகியுள்ளார்.

சின்னம்மை காரணமாக நுவான் பிரதீப் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்ற பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் ஆணையம் தெரிவித்துள்ளது.

நுவான் பிரதீப் பதிலாக, 26 வயதான பந்து வீச்சாளர் கசுன் ராஜிதா இலங்கை அணியில் இணைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்காக ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ராஜிதா, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் ராஜிதா. திங்களன்று மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கையின் அடுத்த போட்டியில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவிடம் வெள்ளிக்கிழமை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான இறுதி இரண்டு லீக் ஆட்டங்களில் வெற்றிபெற வேண்டும். மேலும் அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால் மற்ற போட்டிகளின் முடிவுகளும் இலங்கை அணிக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பது குறி்ப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்