உலகக் கோப்பையில் ரசிகர்களிடையே வெடித்தது மோதல்: நிருபர்கள் மீதும் தாக்குதல்

Report Print Basu in கிரிக்கெட்

உலகக் கோப்பை தொடரில் இன்று ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெற்று வரும் நிலையில், இரு நாட்டு ரசிகர்களும் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெடிங்லேயில் உள்ள, லீட்ஸ் மைானத்தில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

இந்நிலையில், இரு நாட்டு ரசிகர்களும் மைதானத்திற்கு வெளியே மோதலில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து உள்ளூர் செய்தியாளர்கள் வெளியிட்டுள்ள தகவலில், லீட்ஸ் மைதானத்திற்கு வெளியே மோதலில் ஈடுபட்ட ரசிகர்கள், மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டதை படம் பிடித்த செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், ரசிகர்கள் சட்டவிரோதமாக மைதானத்திற்குள் நுழைந்து இருக்கைகளை ஆக்கிரமிப்பு செய்வதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் ரசிகர்கள், பாதுகாப்பு வாயிலை உடைக்க முயற்சி செய்து, பாதுகாப்பு குழு மீது பாட்டில்களை வீசி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், இரண்டு பேரை கைது செய்துள்ளதாக ஹெடிங்லேயில் உள்ள பாகிஸ்தான் நிருபர் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்