இங்கிலாந்து தோற்பதற்காக பணம் வாங்கி உழைக்கிறார்கள்... கதறும் துவக்க வீரர் பேர்ஸ்டோவ்

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழையக்கூடாது என்று அனைவரும் நினைப்பதாக அந்தணியின் துவக்க வீரர் பேர்ஸ்டோவ் அதிரடியாக கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளாக இங்கிலாந்து மற்றும் இந்திய இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால் இந்திய அணி அதற்கு ஏற்ற வகையில் தங்கள் பலத்தை நிரூபிக்க, இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்ததால், கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.

குறிப்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன், இங்கிலாந்து அணி தரத்திற்கு இந்த உலக கோப்பை தொடர் சற்று மோசமாகவே இருந்துள்ளது. வீரர்கள் தங்களது முழு முயற்சியில் ஈடுபடவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இதை அறிந்த துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பையில் தோல்வியைத் தழுவ வேண்டும் என பணத்தை பெற்றுக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த முடிவிற்காகவும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் அவர்களின் மூக்கை உடைக்கும் வண்ணம் வரும் போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடி காட்டும், இதற்கு துணையாக நிற்கும் ஊடகங்கள் அப்போது என்ன சொல்கின்றன என்று பார்ப்போம் என்று கூறியுள்ளார்.

பார்ஸ்டோவ்வின் இந்த கருத்துக்கு மைக்கல் வாகன், இதே ஊடகங்கள் தான் தொடர் துவங்குவதற்கு முன்பு இங்கிலாந்து அணியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.

இதனால் அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து அதற்கு பதிலடி கொடுக்கட்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்